தேர்தல் முடிந்தது. பல்வேறுபட்ட கோணங்களில் தேர்தலை ஆராய்ந்துபார்க்கும் வேலைகளும் அந்தந்த சக்திகளின் நன்களில் இருந்து தொடங்கியாகியும் விட்டன. சிங்கள பேரினவாதக் கட்சிகளுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய விசாரிணைகளும் செய்யப்படுகின்றன. இதில் சில தவறான கணிப்புகளை பார்க்கமுடிகிறது. முக்கியமாக இரண்டு வித கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.
1. சிஹல உறுமய தோற்றுவிட்டதே. ஒரே ஒரு உறுப்பினரை அதுவும் தேசியப்பட்டியல் மூலம் அல்லவா மயிரிழையில் தப்பவேண்டியதாயிற்று. பின் எப்படி அதனை ஒரு பலமான இயக்கம் என்று கருத முடியும்?
2. சிஹல உறுமயவின் தலைவா எஸ்.எல்.குணசேகர ராஜினாமா செய்திருக்கிறார். பலமான கட்டமைக்கப்பட்ட ஒரு இயக்கத்தில் இத்தனை வேகமாக எப்படி ஒரு பிளவு ஏற்பட முடியும்?
இக் கேள்வி மிக மோலோட்டமாகப் பார்த்தால் நியாயமான தர்க்கபூர்வமான கேள்வி. ஆனால் சிங்கள வீரவிதானவின் ஒட்டுமொத்த சித்தாந்தத்தையும் அதன் அமைப்புத்துறை பலத்தையும் அறிந்தவர்களுக்கு இப்படி ஒரு கேள்வியே சிறுபிள்ளைத்தனமானதாக இருக்கும். சிங்கள வீரவிதானவின் மூலோபாயம் தந்திரோபாயத்தை விளங்கிக்கொள்ள முடிந்த ஒருவருக்கு இது ஒரு குழுப்பம் மிகுந்த விடயமாகவே இருக்காது.
இன்று சிறிலங்காவின் அரசியல் நீரோட்டத்தை வழிநடத்திச்செல்லும் இயக்கமாக வளர்ந்திருக்கிற சிங்கள வீரவிதான சகல மட்டங்களிலும் முழு அளவிலுமாக தன்னை ஸ்திரப்படுத்தி வருவது பற்றியும் ஏலவே அதன் அடைவுகள் பற்றியும் அறிந்திருக்கிறோம். பௌத்த அமைப்புகள், அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், மற்றும் வர்த்தகர்கள், தொழிலதிபர்கள், இராணுவ அதிகாரிகள், இராணுவத்தினர், தொடர்பூடகங்கள், வெகுஜன அமைப்புகள், என சகல மட்டங்களிலும் அது தன்னை பலப்படுத்தியிருக்கிறது. இதற்கான பல முன்னணி அமைப்புகளையும் அது உருவாக்கியிருக்கிறது. அடிப்படையில் சிங்கள வீரவிதான அமைப்பு தான் அதன் பகிரங்க மைய அமைப்பாக கட்டப்பட்டிருக்கிறது. மற்றும்படி புலிகளுக்கு எதிரான தேசிய முன்னணி, சிங்கள வர்த்தகா சங்கம் போன்ற அமைப்புகளைப் போலவே சி‘ல உறுமய கட்சியும் சிங்கள வீரவிதானவின் முன்னணி அமைப்புகளில் ஒன்று என்பதை அறிய வேண்டும்.
எனவே அவர்களுக்கு இப்போதைய காலம் கட்சி கட்டுவதல்ல. கட்சி என்பது அவர்களின் மைய அமைப்புக்கும், மைய சித்தாந்தத்துக்குமான ஒரு ஊடகம் மட்டுமே. கட்சியில் அல்ல அதன் அனைத்தும் தங்கியிருக்கிறது. மாறாக மைய வேலைத்திட்டதில் தான் கட்சியும் அடங்கியிருக்கிறது. மைய அமைப்பில் தான் கட்சியும் தங்கியிருக்கிறது.
சி‘ல உறுமய கட்சி கட்டப்பட்டதானது அவர்களின் இலக்கை அடைவதற்கு கட்சி அரசியல் செயற்பாடுகளுக்கூடாக எந்தளவுக்கு போக முடியுமோ அவ்வாறு அந்த அடைவுகளை எட்டத்தான். இம்முறை அவர்கள் பாராளுமன்ற கதிரையை பெற்றார்களோ இல்லையோ இந்த பாராளமன்ற தேர்தல் காலத்தில் கிடைக்கப்பெற்ற அனைத்து சலுகைகளையும், வாய்ப்புகளையும் பயன்படுத்தி அவர்களின் சித்தாந்தத்தை பெருமளவு கொண்டு சென்றார்கள்.
சாதாரண காலகட்டகங்களில் கிடைக்காத பிரச்சார சாதனங்கள், வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்திக்கொண்டார்கள். அவர்களுக்கு இப்போது வேண்டியதெல்லாம் அமைப்பை பலப்படுத்த பாசிச கருத்தேற்றம் செய்யப்பட்ட தேசியவாத சிந்தனைகளை மக்கள் மத்தியில் பரப்புவதே. மேடைகள் பல போட்டார்கள், ஒலிவாங்கிகள் மூலம் வாகனங்களில் ஊர் ஊராக கருத்தைக் கொண்டு சென்றார்கள், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தார்கள், சுவரொட்டிகள் ஒட்டினார்கள், பல ஊடகங்களும் இவர்களின் கட்டுரைகள், பேட்டிகள், செய்திகள் என்பனவற்றை பிரசுரித்தன. இலத்திரன் ஊடககங்கள் பல விவாதத்துக்கான வாய்ப்புகளை வழங்கின. இதில் இலத்திரன் ஊடககங்களிலேயே அதிக இனவாதத்தை கக்குகின்ற டீ.என்.எல் அதிகளவு இடத்தை வழங்கியது முக்கியமானது.
September 22 8.40pm - 8.55pm
September 27 8.40pm - 8.55pm
September 29 9.05pm - 9.20pm
October 04 8.40pm - 8.55pm
October 06 9.05pm - 9.20pm
October 08 9.05pm - 9.20pm
நிலைமைகளை உரசிப் பார்க்கும் தேர்தலாகவும், தமக்கான செயற்பயிற்சிக்கான தேர்தலாகவும் கூட அது இத்தேர்தலைப் பயன்படுத்தியிருந்தது. வடக்கு மாவட்டங்கள் உள்ளிட்ட மொத்தம் 22 தொகுதிகளிலும் போட்டியிட்டது. சம்பிக்க ரணவக்க இந்தக் கட்சி ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னரே எங்களுக்கு பாராளுமன்ற அரசியல் ஒரு இலக்கே அல்ல என்றும் தெளிவாக கூறி வந்ததோடு கட்சி ஆரம்பிக்கப்பட்ட பின்னரும் கூட அதை திரும்பவும் தெளிவாக கூறியிருந்தார். அது போல “’பாராளுமன்றவாதத்துக்குள் சிக்குண்ட சிங்கள அரசியல் தலைவர்களை”’ கடுமையாக சாடியும் வந்திருக்கிறார் என்பது ஞாபகம் இருக்கலாம். அவர்களின் துண்டுபிரசுரத்தையும் அவர்களின் பிரசார உத்திகளையும் பார்த்தால் தெரியும் அவர்கள் வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்த்தே வந்தார்கள். அவர்களின் விஞ்ஞாபனமும் கூட நீண்ட கால இலக்கைக்கொண்டவையே ஒழிய ஒரு அரசாங்கத்துக்குரியதாக இருக்கவில்லை. (அவர்களின் இணையத்தளத்தில் முழு விஞ்ஞாபனத்தையும் பார்க்கலாம்.)
அவர்களின் துண்டுபிரசுரம் ஒன்றில் இப்படியிருக்கிறது.
“’1998 ஆம் ஆண்டு இந் நாட்டின் சனத்தொகை வளர்ச்சிவீதம் 100 குடும்பங்களுக்கு முஸில்கள் 57 வீதம், தமிழர்கள் 30 வீதம், சிங்களவர்கள் 13 வீதம். சிங்கள இனம் இந் நாட்டின் மூன்றாவது இனமாக ஆகப்போகிறது. நாட்டின் பொருளாதாரத்தில் 80 வீதம் தமிழர், முஸ்லிம்களிடம், 20 வீதம் மட்டுமே சிங்களவர்களிடம், நாட்டிலுள்ள பிரதான தொழிலதிபர்கள் 10 பேரில் 8 பேர் தமிழர் ஒருவர் முஸ்லிம், ஒருவர் சிங்களவர், நாட்ன் தேசிய பிரதான வர்த்தகங்களில் 92 வீதம் தமிழ், முஸ்லிம்களிடம் உள்ளன. 8 வீதம் மட்டுமே சிங்களவர்களிடம், நாட்டின் பெரும்தொழிற்துறை உரிமையில் 85 வீதம் தமிழ், சிங்கள மற்றும் அந்நிய நாட்டவர்களிடமே உள்ளன. மிகுதி தான் சிங்களவர்கள் கைகளில்..
என்றெல்லாம் கூறிக்கொண்டே சென்று இறுதியில் ஒரு சிங்கள குடும்பத்திற்கு குறைந்தது 5 “”ஆண்”” குழந்தைகளை பெற்றுத்தாருங்கள். நிகாய பேதங்கள், சாதி பேதங்கள், மத பேதங்கள் என்பனவற்றை அகற்றிவிட்டு சிங்களவர்களாக அணிசேருங்கள். இன்றைய எதிர்கால குழந்தைகள் நாளை உங்களை சபிக்க இடம் வையாதீர்கள். உங்கள் நாளைய சந்ததியினரை அடிமைகளாக ஆக்கிவிடாதீர்கள்.”’
என்கிறது அந்த துண்டுப்பிரசுரம் இதனை வெளியிட்டுப்பவர் சி‘ல உறுயவின் வேட்பாளர்களில் ஒருவரான தாரபேரியே சுகுனசார ‘ரிமி எனும் பிக்கு. இவர் எழுதிய “விபதக’ எனும் சிங்கள இனத்துக்கு இழைக்கப்பட்ட வரலாற்று அநீதிகளின் உள்ளடக்கம் எனும் பொருளிலான ஒரு நூலும் வெளியாகியிருக்கிறது.
சி‘ல உறுமய கட்சி ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டவுடன் அதற்கு ஒரு நிதியம் ஒன்றை உருவாக்கினார்கள். ஒரு சில நாட்களுக்குள் வெளிநாட்டுக் கிளைகளும் உருவாக்கப்பட்டன. அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகளில் உடனடியாக உருவாக்கப்பட்டன.
இறுதியாக சில உறுமய கட்சி தேர்தலில் ஒரு மாவட்டத்திலிருந்தும் தெரிவு செய்யப்படாவிட்டாலும் தேசிய பட்டியலின் மூலம் ஒரு ஆசனத்தை மாத்திரம் பெற்றுக்கொண்டது.
நாடு முழுவதும் மொத்தமாக கிடைத்த வாக்குகளில் 1.47 வீத வாக்குகளை பெற்று ஒரு ஆசனம் அதுவும் மயிhpழையில் பெற்றுக்கொண்ட போது எப்படி 1.22 வீத வாக்குகளை மட்டுமே பெற்றுக்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு 5 உறுப்பினர்களைப் பெறமுடியும் என்று தற்போது கேள்வி எழுப்புகிறது சில உறுமய. இந்த அற்ப தர்க்கத்தை பிரசாசரம் செய்து ஆக தேர்தல் முறையை மாற்ற வேண்டுமென்றும். இது தமிழர்களால் தமிழர்களுக்காக ஏற்படுத்தப்பட்ட தேர்தல்முறை என்று அதன் இணையத்தளத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறது.
உண்மையில் சி‘ல உறுமய தோல்வியுற்றதா? 1994 ஓகஸ்ட் தேர்தலில் மக்கள் ஐக்கிய முன்னணி ஒரு ஆசனத்தையும் பெறாமல் தோல்வியுற்றதையும், சமாதான வேடம் பூண்டிருந்த சந்திரிகா தலைமையிலான பொ.ஐ.மு வென்றபோது போது இதோ இனவாதத்துக்கு மக்கள் கொடுத்த பதில் என கூறினார்கள். ஆனால் இனவாதம் தான் அப்போதும் வென்றது என்பதை யாரும் அன்று ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் காலம் பதில் சொல்லியது. ஆனால் இம்முறை நிலைமை மேலும் மாறானது. முதலாவது சிங்கள வீரவிதானவின் நோக்கம் தேர்தல் தானா? அடுத்தது தற்போதுள்ள தேர்தல் அரசியல் கலாசாரத்தின் முன்னால் வாக்களிப்பை வைத்து மக்களின் எண்ணங்களையோ அரசியலையோ கணக்கிட முடியுமா? அவ்வாறு முடியுமென்றால் மக்கள் சுதந்திரமாக தமது கொள்கைகளுக்காகத்தான், தேர்தலில் நம்பிக்கையுடன் தான் வாக்களித்தார்கள் என்கிற முடிவுக்கு வரவேண்டிவரும். உண்மையைச் சொல்லப்போனால் சிங்கள வீரவிதான தனது முழு வளத்தையும், சக்தியையும் இத்தேர்தலுக்காக பயன்படுத்தியிருக்கவில்லை. அதற்கு தேவையுமில்லை என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். இனி நோர்வேயுடன் பேச்சுவார்த்தை இல்லை என்றும், போரொன்றே தீர்வு என்றும், தீர்வுப்பொதி சரிவராது என்றும், தமிழர்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் முதலில் மகாசங்கத்தினருடன் பேசி முடிவுக்கு வாருங்கள் என்றெல்லாம் தேர்தல் காலத்தில் ஆளுங்கட்சி பேச வேண்டிய நிலைக்குள்ளானது சிங்கள வீரவிதானவின் வெற்றி என்பதை என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். ஏனைய சிங்கள கட்சிகளும் கூட இந்த வட்டத்தை விட்டு வெளியே போகவில்லை.
அதிக கூடிய வாக்குகளைப் பெற்ற சி‘ல உறுமயவின் தலைவர் எஸ்.எல்.குணசேகர கட்சியிலிருந்து விலகினார். திலக் கருணாரத்ன ஏலவே ஒரு பாராளுமன்ற கதிரைச்சுகம் கண்ட ஒரு சராசரி பேரினவாத அரசியல் பேசி வெல்லும் சராசரி அரசியல்வாதி. பாராளுமன்ற உறுப்புரிமையை இரண்டு வருட சுழற்சி முறையில் எஸ்.எல்.குணசேரவும், திலக்கருணாரத்தனவும், பின்னர் சம்பிக்க ரணவக்கவும் வகிப்பதாக இருந்த போதும், சம்பிக்க இதிலிருந்து வாபஸ் வாங்கிக்கொண்டார். ஆனால் முன்னர் ஒப்புக்கொண்ட திலக் கருணாரத்தன பின்னர் விடவில்லை. அதற்கு காரணமாக எஸ்எல்.குணசேகர ஒரு பௌத்தர் என்றும் மக்கள் மத்தியில் அமைப்பு எடுபடாமல் போகலாம் என்றும் கூறி அந்த வாய்ப்பை பெற முயற்சித்தபோது மத்திய குழுவுக்குள் நடந்த சண்டை இறுதியாக 15ஆம் திகதி முடிவுக்கு வந்தது. இறுதியில் பயங்கரவாதத்துக்கு எதிராக போராடினோம். ஆனால் கட்சிக்குள்ளேயே இப்படிப்பட்ட பயங்கரவாதம் இருக்கிறதென்பதை இப்போது தான் உணர்நதுகொண்டேன் என்று எஸ்.எல்.குணசேகர கூறும் அளவுக்கு நிலைமை முற்றியது.
சிங்கள வீரவிதானவுக்கு முதலில் கணக்கு தீர்க்க வேண்டிய சக்தி தமிழர்கள், முஸ்லிம்கள், அதற்காக இனத்துவம் தவிர்ந்த வர்க்கம், சாதி, பால், மதம் போன்றனவற்றை முதன்மைப்படுத்தாது. அதற்கு படிநிலை வரிசை ஒன்று இருக்கிறது. அதன்பின்னர் தான் சிங்கள கத்தோலிக்கர்களை அகற்றி, கொவிகம அல்லாதவர்களை கழற்றி, சுரண்டும்வர்க்க ஆண்களிடம் அதிகாரத்துவத்தை படிப்படியாக அது போய் சேரும். ஆனால் இத்தனை வேகமாக முன்னால் உறுமய கட்சியின் தலைவர் திலக் கருணாரத்னவின் மூலம் வெளிப்பட்டதானது சிங்கள, சுரண்டும்வர்க்க, கொவிகம, ஆணாதிக்க சாரார் அல்லாதவர்களிடம் நம்பகத்த்மையை இழக்க நேரிடுமா அல்லது சிங்கள வீரவிதனவின் புதிய தந்திரோபாய அணுகுமுறைகளால் அது வெற்றிக்கொள்ளப்படுமா என்பது பொருத்திருந்து பார்க்கப்படவேண்டியவை.
ஆக மொத்தத்தில் சி‘ல உறுமய எனும் கட்சிக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதை விட அதன் சித்தாந்தத்துக்கு வெற்றி கிடைத்ததா இல்லையா என்பதையே நாங்கள் பார்க்க வேண்டும். இந்த வழிப்பு இருந்தால் தான் நாங்களும் சரியான அணுகுமுறைகளைக் கையாளுவோம்.
ஆரம்பத்தில் சிங்கள வீரவிதானவுக்கு svv.org எனும் இணையத்தளம் இருந்தது. பின்னர் இதனை அவர்கள் sinhale-org எனும் பெயரில் மாற்றிக்கொண்டார்கள். பல்வேறு பேரினவாத இணையத்தளத்திற்கும் இங்கிருந்து இணைப்பைக் கொடுத்தார்கள். சமீபத்தில் சில உறுமய கட்சிக்கென்று இரு இணையதளங்களை உருவாக்கினார்.

0 comments:
Post a Comment